• Latest News

    May 25, 2024

    உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு பதக்கம்


     ஜப்பானின் கோபே விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

    ஆண்களுக்கான F63 வகைப்படுத்தல் பிரிவு குண்டு எறிதல் போட்டியில் இலங்கையின் பரா வீரர் பாலித்த பண்டார வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

    அப் போட்டியில் தனது 4ஆவது முயற்சியில் குண்டை 14.27 மீற்றர் தூரத்திற்கு எறிந்தே பாலித்த பண்டார வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

    அப் போட்டியில் பெரிய பிரித்தானிய பரா வீரர் அலெட் டேவிஸ் 15.60 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

    வெள்ளிப் பதக்கத்தை குவைத் பரா வீரர் பைஸால் சொரூர் (14.84 மீற்றர்) வென்றார்.

    நேற்று நிறைவுக்கு வந்த உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு ஒரு வெள்ளி உட்பட 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

    ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் சமித்த துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தையும் T44 வகைப்படுத்தல் பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இந்திக்க கமகே வெண்கலப்  பதக்கத்தையும்   வென்றெடுத்தனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு பதக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top