அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்தப்படும். அதனை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனப் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
அரசியலமைப்பின் பிரகாரம், ஜனநாயகத்தைப் பாதுகாத்து ஜனாதிபதி தேர்தல் குறித்த கால எல்லைக்குள் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாகவும் உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பாராளுமன்றத் தேர்தலையோ இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கான பிரேரணைகளை பல்வேறு தரப்பினர் சமர்ப்பிக்கலாம் அல்லது அது தொடர்பான எந்தவொரு கருத்தையும் சமர்ப்பிக்கலாம் என்பது அவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.
0 comments:
Post a Comment