• Latest News

    May 29, 2024

    தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

     
    தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மக்களின் விருப்பத்துக்கு அமைய நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தேர்தல்களை நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்தாது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலும் இரண்டாண்டு காலம் பதவி நீடிப்பு வழங்க வேண்டும்.அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் செலவுகளும்,சுற்றாடல் மாசடைவும் மாத்திரம் மிகுதியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார குறிப்பிட்டிருந்தார்.

    ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரது இந்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு பதிவேற்றம் செய்துள்ளார்.

    தேர்தலை நடத்தாது ஜனாதிபதியினதும்,பாராளுமன்றத்தினதும் பதவி காலத்தை நீட்டிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளை பாதிக்கும். தற்போதைய நிலையில் மக்களின் விருப்பத்துக்கு அமைய நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, மக்களின் குரல்களை தாமதப்படுத்த கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top