இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி (Strawberry) செய்கை முன்மாதிரி கிராமம் நுவரெலியாவில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள நான்கு கிராமங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்ட்ரோபெரி உற்பத்தி முன்மாதிரி கிராமத்தை அமைப்பதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இரண்டு கோடி ரூபாய் செலவில் 50 விவசாயிகளை பயன்படுத்தி 42 காப்பக வீடுகளில் இந்த ஸ்ட்ரோபெரி உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தேவையான நிதிவளம், செய்கைக்கான ஸ்ட்ரோபெரி செடிகள் உட்பட செய்கை நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப வளங்கள் மற்றும் நீர்வளம் என்பவற்றை கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படும்.
இந்த ஸ்ட்ரோபெரி செய்கைக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்ட்ராபெரி செடிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
ஸ்ட்ரோபெரி செடிகள் பாதுகாப்பாக பசுமைக் கூடாரங்களில் நடவு செய்யும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.
0 comments:
Post a Comment