• Latest News

    May 18, 2024

    முன்னாள் தவிசாளர் அஸ்ரப் தாஹிர்க்கு “சமூக சேவையில் சிறந்த சமூகத் தலைமைக்கான விருது” Video

     Business World Excellence Award - 2023 இன் “சமூக சேவையில் சிறந்த சமூகத் தலைமைக்கான விருது” முன்னாள் தவிசாளர் M.A.M.அஸ்ரப் தாஹிர்க்கு வழங்கப்பட்டது.

    அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் Business World International Organization - USA அமைப்பானது ஏழு நாடுகளை உள்ளடக்கியதாக வியாபார ரீதியில் சிறந்த அடைவை பெற்றுக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் சிறந்த அடைவுகளை பெற்ற நன்மதிப்புள்ளவர்களுக்குமான சாதணையாளர் விருது மற்றும் கெளரவிப்பு நிகழ்வுகளை இலங்கையிலும் வருடா வருடம் தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றது.

    அந்த வகையில் Business World Excellence Award - 2023 இன் “சமூக சேவையில் சிறந்த சமூகத் தலைமைக்கான விருது” “Leadership Excellence in Society for Social Service Award” நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அவர்களுக்கு பங்களாதேஷ் நாட்டின் தூதுவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

    இந்நிகழ்வானது கடந்த 17.05.2023  கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்களென பலரும் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

    இந்த விருதிற்கான தகுதிகான் தெரிவானது, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசளாரக 2008 தொடக்கம் 2023 வரை மக்களால் தெரிவு செய்யப்பட்டு சிறந்த சேவை புரிந்தமை, வியாபார நிறுவணங்களை சிறந்த முன்னேற்றத்துடன் நடாத்தி வருகின்ற அனுபவப் புலமை மற்றும் Mass Foundation சமூக சேவை அமைப்பினை சிறந்த முறையில் வழிநடாத்தும் தலைமை என்பனவற்றை அடிப்படையாக கொண்டே இவ்விருது முன்னாள் தவிசாளர் அஸ்ரப் தஹிர் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    -ஊடகப் பிரிவு-


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்னாள் தவிசாளர் அஸ்ரப் தாஹிர்க்கு “சமூக சேவையில் சிறந்த சமூகத் தலைமைக்கான விருது” Video Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top