• Latest News

    June 30, 2024

    ஹமாஸ் அமைப்பினருக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள், நபர்களின் சொத்துக்கள் முடக்கம, விசா தடை

     ஹமாஸ்(Hamas) அமைப்பினருக்கு நிதியுதவி அளிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் சொத்துக்கள் முடக்கம் மற்றும் விசா தடைகளை அறிவித்துள்ளது. 

    அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் படைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம்(European Union ) தடைகள் விதிப்பது இது இரண்டாவது முறையாகும். இதுவரை 12 தனி நபர்கள் மற்றும் 3 நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஹமாஸ் தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளது. 


    தற்போது ஸ்பெயின் (Spain) நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனமொன்றிற்கும், சூடான் நாட்டில் இரண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்துள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் மீதும் தடை விதித்துள்ளது. தெற்கு இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் அக்டோபர் 7ம் திகதி முன்னெடுத்த தாக்குதலில் 1,195 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    அத்துடன் பணயக் கைதிகளாக தற்போது 116 பேர்கள் காசாவில் சிக்கியுள்ளதோடு,  42 பேர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைகளுக்கு பதிலடியாக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதலில் இதுவரை பெரும்பாலும் பெண்கள், சிறுவர்கள் உட்பட்ட பொதுமக்கள் உள்ளடங்களாக 37,700 கொல்லப்பட்டப்பட கடந்துள்ளதாக கூறுகின்றனர். 

    இந்நிலையில், 27 ஐரோப்பிய நாடுகளும் காசா போர் தொடர்பில் ஒருமித்த கருத்துக்கு வர இதுவரை போராடி வருவதாகவே கூறப்படுகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹமாஸ் அமைப்பினருக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள், நபர்களின் சொத்துக்கள் முடக்கம, விசா தடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top