• Latest News

    June 30, 2024

    T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி தன்வசமாக்கியது

     2024 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.

    இதன்போது, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
    மேற்கிந்திய தீவுகள் நாட்டின் பார்படோஸ் - Bridgetown மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
    இதன்படி, இந்திய அணி சார்பில் விராட் கோலி (Virat Kohli) அதிகபட்சமாக 76 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், அக்சர் படேல்(Axar Patel) 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் கேசவ் மகாராஜ் (Keshav Maharaj) மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே (Anrich Nortje) தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

    இந்நிலையில், தென்னாபிரிக்க அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியுற்றது.அதன்படி, 9 ஆவது ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி தன்வசமாக்கியது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி தன்வசமாக்கியது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top