அடுத்த 24 முதல் 48 மணித்தியாலங்களிற்குள் ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் அந்த அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்களிடம் பிளிங்கென் இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை தாக்குதல் இடம்பெறலாம் எனபிளிங்கென் தனது சகாக்களிடம் தெரிவித்துள்ளார்.
ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என பிளிங்கென் வலியுறுத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:
Post a Comment