• Latest News

    August 05, 2024

    எஞ்சியிருக்கும் மொட்டுக் கட்சியின் 20 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமது பக்கத்திற்கு இழுப்பதற்கு ஜனாதிபதியின் ஆதரவு அணியினர் முயற்சி


    ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ராஜபக்சர்கள் பக்கம் தற்போது எஞ்சியிருக்கும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருடன் அரச தரப்பு கலந்துரையாடுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    விசேட சந்திப்பு

    இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியுள்ளார் என கூறப்படுகின்றது.

    மேற்படி, 20 எம்.பிக்களும் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரின் தீவிர விசுவாசிகள் என்றும் தெரியவந்துள்ளது.

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது என்றும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அத்துடன், அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

    ரணிலுக்கான எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ள அரசு மொட்டு எம்.பிக்கள், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எனப் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களுடன் அரச தரப்புபேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றது.

    இதேவேளை, வடக்கு - கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளுடனும் அரச தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

    இந்த நடவடிக்கையின் பயனாக பல எம்.பிக்கள் ரணிலின் பக்கம் சாய்ந்துள்ளனர் என்றும், 100 எம்.பிக்களுக்கு அதிகமானவர்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எஞ்சியிருக்கும் மொட்டுக் கட்சியின் 20 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமது பக்கத்திற்கு இழுப்பதற்கு ஜனாதிபதியின் ஆதரவு அணியினர் முயற்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top