• Latest News

    August 05, 2024

    வங்கதேசத்தின் பிரதமர் இராஜினாமா! நாட்டை விட்டு வெளியேற்றம்!! (BBC செய்தி)


    வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர் எங்கே சென்றார்?
     

    வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிலைமை மோசமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்த்திற்குள் நுழைந்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
     
    முன்னதாக, அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்பதை அங்குள்ள பிபிசி செய்தியாளர் உறுதி செய்துள்ளார்.
     

    நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாவதை உணர்ந்த அவர், தனது சகோதரியுடன் வங்கதேசத்தை விட்டே வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் உடன் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவை நோக்கிச் செல்வதாக பிபிசி பங்களா செய்தி வெளியிட்டுள்ளது.
     
    வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சியின் தவறான அரசியல் நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கியது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
     
    கடந்த வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​அவர் தற்போதைய ஒதுக்கீட்டு சீர்திருத்த முறையைக் குறிப்பிட்டு, அதை விடுதலைக்கு ஆதரவான மற்றும் விடுதலைக்கு எதிரான சக்திகள் என இருவகையாக ஒப்பிட்டார். கடந்த கால கட்டத்தில் அவரது கட்சி அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திய கதை இது.
     

    அவர் கூறுகையில்: "சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக்குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்றால், ரசாக்கர்களின் பேரப்பிள்ளைகள் (பாகிஸ்தான் ஒத்துழைப்பாளர்கள்) ஒதுக்கீடு பெற வேண்டுமோ? அதுதான் எனது கேள்வி." என்று பேசினார். 
     
    அவர் இவ்வாறு பேசிய சில மணி நேரங்களில், பல்வேறு வளாகங்களில் மாணவர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத் தொடங்கினர்.
     
    காவல்துறை மற்றும் உயரடுக்கு பாதுகாப்பு படை, ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் (RAB) படையுடன் இணைந்து.  போராட்டக்காரர்களுக்கு பதிலடி கொடுத்தத ஆளும் கட்சியின் மாணவர் பிரிவும் அவர்களின் தாக்குதலில் இணைந்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. 
     
    அடுத்த 72 மணி நேரத்தில், வங்கதேசத்தின் பல இடங்களில் வன்முறை மோதல்கள் வெடித்தது. தேசிய தொலைக்காட்சி கட்டிடம் எரிக்கப்பட்டது. ரு சிறைச்சாலை வாயில் உடைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோடினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
     
    ஷேக் ஹசீனாவுக்கு இது மிகப்பெரிய சோதனை. வங்க தேசத்தின் பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சாதாரண மாணவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணான ஹசீனாவின் வலிமையை அசைத்து பார்த்தனர்.
     
    பதினாறு ஆண்டுகளாக, பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை வறுமையில் இருந்து மீட்டெடுத்தார். 
     

    அவரின் ஆட்சியில் சர்வாதிகார தலைமை போக்கு இருந்தபோதிலும் தேசத்தில் நிகழ்ந்த பெரிய முன்னேற்றங்களுக்கு அவரே காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். 
     
    பெரிய பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. ஆனால் இம்முறை அவரின் சக்தியை மாணவர் சக்தி அசைத்துவிட்டது. 
     
    பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் அமைதியின்மை, கலவரம் மற்றும் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளன.
     
    இது பிரஷர் குக்கர் திடீரென வெடிப்பது போன்ற நிலை'
     
    ஆசியாவில் சர்வாதிகாரம் பற்றி விரிவாக ஆய்வு செய்த ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் முபாஷர் ஹசன், இது ஒரே இரவில் ஏற்பட்ட போராட்டம் அல்ல, மாறாக கொஞ்சம் கொஞ்சமாக கோம் அதிகரித்து, "பிரஷர் குக்கர் திடீரென வெடித்தால் எப்படி இருக்கும் அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது"  என்று விவரித்துள்ளார்.
     
    டாக்டர் ஹசன் பிபிசி பங்களாவிடம் கூறுகையில் : "நினைவில் கொள்ளுங்கள், பத்திரிகை சுதந்திர குறியீட்டில் ரஷ்யாவிற்கும் கீழே இருக்கும் ஒரு நாட்டைப் பற்றி இங்கே பேசுகிறோம். 
     
    "ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியினரின் விடுதலைப் போரின் உணர்வை அதிகமாக அரசியலாக்குவது, குடிமக்களுக்கு ஆண்டுதோறும் அடிப்படை வாக்குரிமை மறுப்பது மற்றும் அவரது ஆட்சியின் சர்வாதிகாரத் தன்மை ஆகியவை சமூகத்தின் ஒரு பெரிய பிரிவினரை கோபப்படுத்தியுள்ளன.” 
     
    "துரதிர்ஷ்டவசமாக, அவர் நாட்டிலுள்ள அனைவருக்கும் பிரதமராக நடந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரு குழுவுக்கு மட்டுமே தலைவராக இருந்தார்."
     
    வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரமாக நடக்கும் நிகழ்வுகளால் டாக்டர் ஹசன் வியப்படையவில்லை.
     
    1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் பிள்ளைகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மாணவர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். 
     
    கடந்த மாதம் சர்ச்சைக்குரிய இந்த ஒதுக்கீட்டு முறையை உயர்நீதிமன்றம் மீண்டும் நடைமுறைப்படுத்திய போது எதிர்ப்புகள் அதிகரித்தன, ஆளும் கட்சியினர், போராட்டக்காரர்களைத் தாக்கியபோது போராட்டம் வன்முறையாக மாறியது. 
     
    முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, வங்கதேச உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு முறையை மீண்டும் நிறுவிய மற்றும் மாணவர் போராட்டங்களைத் தூண்டிய சர்ச்சைக்குரிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது.
    Copy BBC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வங்கதேசத்தின் பிரதமர் இராஜினாமா! நாட்டை விட்டு வெளியேற்றம்!! (BBC செய்தி) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top