• Latest News

    August 21, 2024

    பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல இராஜினாமா ! சஜித் பிரேமதாச விரைவாக ஜனாதிபதியாக முயற்சிக்கிறார் என்றும் அவர் தெரிவிப்பு

     


    ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக சபைக்கு அறிவித்துள்ளார்.
    இன்று புதன்கிழமை (21) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றினை விடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவாக ஜனாதிபதியாக முயற்சிக்கிறார் என்றும் கோட்டபய ராஜபக்‌ஷவுக்கு ஏற்பட்ட கதியை ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என்றும் இதன்போது தலதா அத்துகோரல  குறிப்பிட்டுள்ளார்.

    இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரியும் ஆவார். தலதா அத்துகோரள காமினி அத்துகோரளவின் மரணத்திற்குப் பின்னர்  அரசியலில் பிரவேசித்தார்.

    தலதா அத்துகோரள 2004, 2010, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல இராஜினாமா ! சஜித் பிரேமதாச விரைவாக ஜனாதிபதியாக முயற்சிக்கிறார் என்றும் அவர் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top