• Latest News

    August 08, 2024

    சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டமைப்பு! உடன்படிக்கை கைச்சாத்து. மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை

    எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 கட்சிகள் இணைந்துள்ளன.

    இந்தக் கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை இன்று (08) இடம்பெற்றது.

    “பிளவுபடாத ஐக்கிய நாட்டுக்குள் சகலருக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டுமென்ற கோட்பாட்டின்” பிரகாரம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.

    08 கட்சிகள் கூட்டணி
    ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகரவின் தரப்பு உட்பட 08 கட்சிகள் கூட்டணியின் பிரதான பங்காளிகளாக உள்ளன.

    அத்தோடு, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக் கொண்டுள்ளார்.

    அதேபோன்று பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் எம்.பிகளும், பல்வேறு சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளன.

    மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை

    இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்;ஹரீஸ், பைசால் காசிம், அலிசாஹீர் மௌலானா ஆகியோகள் இன்றைய உடன்படிக்கை நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.


    இவர்கள் இவ்வாறு கலந்து கொள்ளாமையிட்டு பல்வேறு சந்தேகங்கள் முன் வைக்கப்படுகின்றன. 












    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டமைப்பு! உடன்படிக்கை கைச்சாத்து. மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top