நாடளாவிய ரீதியில் உள்ளூர் ஊடகவியலாளர்கள் அனைவரையும் ஜனாதிபதி செயலகம் பத்தரமுல்லயில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (06.08.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
" இலங்கையில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர்கள் இன்று மாலை வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இது தேர்தல் சட்டத்தை மீறும் செயல். எனவே, நாட்டின் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையின் நோக்கம் தேர்தலுக்கு ஆதரவைப் பெறுவதே ஆகும்.
கண்டியில் இருந்து இரண்டு பேருந்துகள் புறப்படுகின்றன. வருபவர்களுக்கு ஐயாயிரம் ரூபா வவுச்சர் வழங்கப்படும். இது தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment