சஹாப்தீன் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று (06) மாலை 06.30 மணி முதல் இரவு 09.45 மணிவரை வெள்ளவத்தை கிரீன் பலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நீண்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இதனால், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் முடிவுகளை எடுப்பதில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் சிலர் ரணிலுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளமையே இதற்கு காரணமென்று தெரியவருகின்றது.
இதே வேளை, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சஜித்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில்விக்கிரமசிங்க, சஜித் ஆகியோர்களுடன் கலந்து பேசி கட்சியினால் முன் வைக்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று முடிவினை அறிவிக்க இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment