• Latest News

    October 07, 2024

    ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி: பங்களாதேஷ் இங்கிலாந்து அணியிடம் தோல்வி

     மகளிருக்கான 20க்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் மற்றுமொரு ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி, பங்களாதேஷ் மகளிர் அணியை 21 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

    நேற்று (05) சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில், முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்களை பெற்றது.எனினும் பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களையே பெற்று தோல்வியை தழுவியது.இந்தநிலையில் இதுவரையில் நடைபெற்ற போட்டியின் அடிப்படையில் வெளிடப்பட்ட புள்ளிப்பட்டியலின்படி, ஏ குழுவில் நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் என்பன ஒரு போட்டியில் வெற்றி பெற்று தலா இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளன.

    “B” பிரிவு

    இலங்கையும் இந்தியாவும் புள்ளிகள் எதனையும் பெறவில்லை. இலங்கையை பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடனான போட்டிகளில் தோல்வியடைந்தது. இந்தியா நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் தோல்விகண்டது. “B பிரிவில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் என்பன தலா இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளன.

    மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியும், ஸ்கொட்லாந்து அணியும் புள்ளிகள் எதனையும் பெறவில்லை.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி: பங்களாதேஷ் இங்கிலாந்து அணியிடம் தோல்வி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top