பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடும் சவாலுக்கு மத்தியில் 7 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை இந்தியா ஈட்டியது.
இந்தக் குழுவுக்கான தனது ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்திடம் படு தோல்வி அடைந்த இந்தியாவுக்கு இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
ஆனால், பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றபோதிலும் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் நிகர ஓட்ட வேக அடிப்படையில் தொடர்ந்தும் நான்காம் இடத்திலே இருக்கிறது.
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
106 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பnடுத்தாடிய இந்தியா கடும் சவாலுக்கு மத்தியில் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 108 ஓட்;டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அதிரடிக்கு பெயர்பெற்ற ஸ்ம்ரித்தி மந்தனா நீண்;ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
எனினும் மற்றைய ஆரம்ப வீராங்கனை ஷபாலி வர்மாவுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரொட்றிகஸ் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தார்.
ஆனால், ஷபாலி வர்மா 32 ஓட்டங்களுடனும் ஜெமிமா ரொட்றிகஸ் 23 ஓட்டங்களுடனும் ரிச்சா கோஷ் ஓட்டம் பெறாமலும் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (80 - 4 விக்.)
அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 104 ஓட்டங்களாக உயர்த்தினர்.
அப்போது முன்னாள் பாய்ந்து பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த ஹார்மன் ப்ரீத் தரையில் வீழ்ந்ததால் அவரது கழுத்துப் பகுதியில் கடும் உபாதை ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் 29 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார்.
அடுத்து களம் நுழைந்த சஜீவன் சஜானா பவுண்டறி அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
தீப்தி ஷர்மா 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் பாத்திமா சானா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தியதால் பாகிஸ்தான் ஓட்டங்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டது.
ரேணுகா சிங் தனது முதலாவது ஓவரிலேயே குல் பெரோஸாவை (0)ஆட்டம் இழக்கச் செய்ததைத் தொடர்ந்து சித்ரா ஆமின் (8), ஒமய்மா சொஹெய்ல் (3) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.
முன்வரசையில் ஆரம்ப வீராங்கனை முனீபா அலி மாத்திரம் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 17 ஓட்டங்களைப் பெற்றார்.
15ஆவது ஓவரில் பாகிஸ்தானின் 7ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 71 ஓட்டங்களாக இருந்தது.
எனினும், நிதார் தார் 28 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 13 ஓட்டங்களையும் சயிடா ஆரூப் ஷா ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தானை கௌரவமான நிலையில் இட்டனர்.
பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷ்ரீயன்கா பட்டில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: அருந்ததி ரெட்டி.



0 comments:
Post a Comment