• Latest News

    October 07, 2024

    பெஞ்சமின் நெட்டன்யாகு யுத்தம் தொடர்வதை அவர் விரும்புகின்றார்- இஸ்ரேலின் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்

     


    ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வருடமாகின்ற நிலையில்  ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலின் பெஞ்சமின் நெட்டன்யாகு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 

    காசாவில் தொடர்ந்தும் சிக்குண்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக மேலும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இஸ்ரேலிய தலைநகர் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள பணயக்கைதிகளின் உறவினர்கள்  பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கு மேலும் தீவிர நடவடிக்கைகள் அவசியம் என மன்றாட்டமா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இஸ்ரேலின் கேசரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் தனிப்பட்ட இல்லத்தின் முன்னாலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

    பெஞ்சமின் நெட்டன்யாகு காரணமாகவே பணயக்கைதிகள் இன்னமும் காசாவில் சிக்குண்டுள்ளனர் என காசாவில் சிக்குண்டுள்ள மட்டன் என்பவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

    பெஞ்சமின் நெட்டன்யாகு பணயக்கைதிகளை விடுதலை செய்யவிரும்பவில்லை வடக்கில் யுத்தம் முடிவிற்கு வந்தாலும் தெற்கில் யுத்தம் தொடர்வதை அவர் விரும்புகின்றார், என  அந்த தாயார்  தெரிவித்துள்ளார்.

    லெபனானில் இடம்பெறுகின்ற மோதல்களையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    யுத்தம் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு அரசியல் ரீதியில் உதவுகின்றது அவர் ஆட்சியிலிருப்பதை உறுதி செய்கின்றது என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்தும் பணயக்கைதியாக சிக்குண்டுள்ள இட்ஜிக் என்பவரின் சகோதரர் இஸ்ரேலிய பிரதமர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

    பணயக்கைதிகளாக இஸ்ரேலியர்கள் பிடிக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது,என தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவின் தனிப்பட்ட அரசியல் உயிர்வாழ்தலிற்கான யுத்தத்தில் இஸ்ரேலியர்கள் பயணக்கைதிகளாக சிக்குப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பெஞ்சமின் நெட்டன்யாகு யுத்தம் தொடர்வதை அவர் விரும்புகின்றார்- இஸ்ரேலின் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top