• Latest News

    October 07, 2024

    ஏழு பேரின் சொத்துக்களை முடக்கம்! இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தீர்மானம்

     அரசியல்வாதிகள், பொது அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேரின் சொத்துக்களை முடக்கும் வகையிலான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

    இதன்படி, இந்த ஏழு பேரும் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிகளை பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குறித்த ஏழு பேரும் அவர்களின் சாதாரண சம்பளத்தில் வாங்க முடியாத அளவுக்கு அதிக சொத்துக்களை எப்படி சம்பாதித்தார்கள் என்பது குறித்து ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.

    இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்களில் சிலர், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலம் சொத்துக்களை பெற்று வந்ததாக கூறுவது முற்றிலும் பொய்யான கூற்று என்று ஆணைக்குழு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த அரசாங்கத்தின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள், தாம் சில சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதை விளக்க முடியாமல் உள்ளனர். கறுவாத் தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் நிலம் வாங்கியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரைப் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரின் 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 5 காப்புறுதிக் காப்புறுதிகளை முடக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.

    நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தனது நெருங்கிய சகாக்களின் பெயரில் வாங்கியதாக கூறப்படும் ஏராளமான சொத்துக்கள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஏழு பேரின் சொத்துக்களை முடக்கம்! இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தீர்மானம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top