• Latest News

    October 07, 2024

    ஹமாஸ் பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை

    இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பானது பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


    ஹமாஸ் அமைப்பானது கடந்த 07.10.2024 அன்று இஸ்ரேலின் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில், நாளையுடன் இஸ்ரேல் மீதான தாக்குதல் இடம்பெற்று ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில் ஹமாஸ் தொடர்பில் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூடுதல் பாதுகாப்பு 

    இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானியை மேற்கோள் காட்டியே இந்த தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், நாளையதினம் நாடு முழுவதும் இஸ்ரேல் இராணுவமானது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இது தொடர்பில் நடவ் ஷோஷானி கருத்து தெரிவிக்கையில், ''இஸ்ரேல் மீதான தாக்குதலின் ஓராண்டு நிறைவை குறிக்கும் வகையில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் போக்கைக் நாங்கள் அறிவோம்.

    இதன் காரணமாக, நாங்கள் அதற்குத் தயாராகி, தெற்கு இஸ்ரேலில் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹமாஸ் பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top