• Latest News

    March 21, 2025

    ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

    மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன இன்று (21) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

    அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை ஆவணப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, 1300 பெயர்களைக் கொண்ட இந்தப் பட்டியல் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது வழங்கப்பட்டுள்ளது. 

    ஐக்கிய தேசியக் கட்சியினரின் பட்டியல்

    அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் 900ற்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்னா வழங்கியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்பே ஜே.வி.பியால் சிறுவர் படையினர் உருவாக்கப்பட்டனர். இதற்கு சிறந்த உதாரணம், 70 வயதுடைய ஐக்கிய தேசிய கட்சியின் பெண்ணைக் கொலை செய்ய, 13 வயதான ‘கந்தலே போனிக்கி,” பயன்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேரத்ன கூறினார்.

    ஜே.வி.பியால் இன்னும் பல ஐ.தே.க உறுப்பினர்கள், சிறுவர்களை பயன்படுத்தி கொல்லப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

    பொதுமக்களுக்கும் அழைப்பு

    இந்த நிலையில், தற்போதைய பட்டியலில் சேர்க்கப்படாத பெயர்கள், ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்ட “பட்டலந்த விவாதத்தின்” போது சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

    இதேவேளை, சேர்க்கப்பட வேண்டிய பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் குறித்த கூடுதல் தகவல்களை சமர்ப்பிக்குமாறு, தனது பேஸ்புக் பக்கத்தில், அவர் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

    ஜேவிபியினால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 1300 பேரின் பெயர் பட்டியல் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்னதாகவே ஜே.வி.பி  சிறுவர் போராளிகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

    கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனை பயன்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வயது பெண்ணை கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான ஜோர்ஜ் ரத்நாயக்கவும் ஒரு சிறுவன் மூலம் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

    மேலும், சாகரிகா கோமஸ் கொலை சம்பவத்தையும் அவர் நாடாளுமன்றத்தில் நினைவூட்டினார். இத்தகைய கொலைகளுக்கு நீதியில்லையா? என்று அவர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top