• Latest News

    March 26, 2025

    மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இடையே முக்கிய சந்திப்பு!

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை இன்றைய தினம் (26) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
    இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
    "இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன், எமது நீண்டகால தொடர்புகள் மற்றும் நிலைபேறான தன்மை குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
    இதன்போது, புனித ரமலான் மாதத்தில், காசா மக்கள் எதிர்கொண்டுள்ள பெரும் துயரங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பிலும் எமது ஆழ்ந்த கவலையை தூதுவரிடம் வெளிப்படுத்தினோம்.
    மேலும், மனிதாபிமான விடயங்களை முன்னிறுத்தியும் உலக அமைதிக்காகவும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
     ஊடகப்பிரிவு-


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இடையே முக்கிய சந்திப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top