• Latest News

    March 27, 2025

    பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு, இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்ட போதிலும், ஒரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

    கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், குற்றச்சாட்டுக்களை பரிசீலித்த நீதவான்,சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபா சரீரப் பிணை இரண்டிலும் ரூ.50,000 அபராதமும் விதித்து பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top