நாட்டில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28.12.2025) குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பொது அவசரநிலை நிலவுவதால், பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல், மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் இந்த பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment