யூ.கே. காலித்தீன்-
சாய்ந்தமருது
ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் சுனாமி 21ம் ஆண்டு
நிறைவையொட்டி மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட்
பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமினை
(27) ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்றது.
"ஓர்
உயிரை வாழவைத்தவர் எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போல் ஆவார் (ஹதீஸ்)"
எனும் இறைகொள்கைக்கு ஏற்வகையில் உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம் எனும்
தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வானது
அஸ்ரப் ஞாபாகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர், தாதிமார்கள் மற்றும் ஊழியர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இளைஞர், யுவதிகள் எனது பொதுமக்களும் ஆர்வமுடன் இரத்தானத்தை வழங்குவதில் ஆர்வாக ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.




0 comments:
Post a Comment