• Latest News

    December 28, 2025

    மருத்துவமனையில் அவசர பிரிவில் பாரதிராஜா அனுமதி


     'என் இனிய தமிழ் மக்களே' என சொன்னதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பாரதிராஜாவின் முகம்தான். இயக்குநர் இமயம் என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் பல திறமையான நடிகர்கள், நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, கருத்தம்மா என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

    மருத்துவமனையில் அனுமதி

    இந்த நிலையில், 84 வயதாகும் இயக்குநர் பாரதிராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறுகின்றனர்.மேலும் வழக்கமான பரிசோதனைக்காகத்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.    

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருத்துவமனையில் அவசர பிரிவில் பாரதிராஜா அனுமதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top