(ஏ.எச்.எம்.ஹாரீஸ் - மத்திய முகாம் செய்தியாளர்)
மத்திய
முகாம் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் முறைகேடான சம்பவங்கள்
மற்றும் வீதி ஒழுங்கு முறைகளை பின்பற்றாமை தொடர்பான விசேட
பொதுக்கூட்டமொன்று மத்திய முகாம் ஜும்மா பள்ளிவாசலில் அதன் தலைவர் எம்.
எஸ். எம். வஷீர் தலைமையிலும், மத்திய முகாம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்
யு.எல்.எம்.ஜெமீலின் நெறிப்படுத்தலிலும் (26) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.என்.டி.பிரசாத் ரத்னாயக்க கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்..
எமது
பிரதேசத்தில் பல்வேறு பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றில்
முறைகேடான சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றது. அவற்றை நாங்கள் கண்டறிந்து
அவற்றுக்கான தண்டனைகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றோம்.
ஒரு சில
முறைகேடான விடயங்களை செய்யும் போது அவற்றை கண்டறிந்து, விசாரணைகளை
மேற்கொண்டு, குற்றம் நிரூபிக்கப்படும் பச்சத்தில் தண்டனை வழங்கப்படும்.
இவ்வாறான தண்டனைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரச நீதிகளை சரியாக
பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் பாதசாரிகளுக்கு இடையூறு
விளைவிக்கும் வகையில் சில இளைஞர்கள் வீதி ஒழுங்கு முறைகளை சரியாக
பின்பற்றாமல் செயற்படுகின்றார்கள். அதனை தடுப்பதற்காக போக்குவரத்து பொலிஸ்
உத்தியோகத்தர்களை எதிர்வரும் வாரத்தில் இருந்து நியமிக்கப்படும் எனவும்
வீதி ஒழுங்கு முறைகளை மீறும் பச்சத்தில் அதற்கான ஒழுங்காற்று விசாரணைகள்
இடம் பெறும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பொதுமக்களாகிய
நீங்கள் எவ்வாறான விடயங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் அரச நியதிகளை சரியாக
பின்பற்றி செயற்படுமாறும் கேட்டுக் கொண்டார்.
மத்திய முகாம் பொலிஸ்
நிலையத்தில் ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் பெற்றுச்
சென்றதையடுத்து கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட இவர் பொதுமக்களுக்கான
விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment