(ஏ.எல்.எம்.ஷினாஸ் )
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின்
பொறுப்பு அதிபராக அப் பாடசாலையின் பிரதி அதிபராக கடமையாற்றிய எம்.பி.அஹமட்
ராஜி (12) மாலை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஷம்ஸ் மத்திய
கல்லூரியின் பொறுப்பு அதிபராக கடமையாற்றிய எம்.எம்.ஹிர்பகான், கிழக்கு
மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அதிபர் சேவை இடமாற்றத்தின் பிரகாரம்
சாய்ந்தமருது அல்-ஜலால் மகா வித்தியாலயத்தில் பொறுப்பு அதிபராக இன்று (12)
கடமையேற்றதால் ஷம்ஸ் மத்திய கல்லூரியில் ஏற்பட்ட ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு பொறுப்பு அதிபராக எம்.பி.அஹமட் ராஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர்
கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வு (12) மாலை ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர்
அலுவலகத்தில் இடம்பெற்றது. கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.
சஹூதுல் நஜீம், பாடசாலையின் PSI இணைப்பாளரும் பிரதிக் கல்விப்
பணிப்பாளருமான எம்.எல். எம். முதர்ரீஸ் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர் ஆகியோரின் முன்னிலையில் எம்.பி. அஹமட் ராஜி பொறுப்பு அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமையை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வில், வலயக் கல்விப் பணிப்பாளர், முன்னாள் அதிபரின் சேவையை பாராட்டி நன்றி தெரிவித்து உரையாற்றியதுடன், எதிர்காலத்தில் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஒழுக்க விழுமியங்கள் போன்ற பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். இந்த சவாலை வெற்றி கொள்ளும் அதிபராக தற்போது பொறுப்பேற்கும் அதிபர் செயற்பட வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார். முன்னாள் அதிபர் எம்.எம். ஹிர்பகான் தன்னுடைய சேவை காலத்தில் தன்னோடு இணைந்து பயணித்த அனைவருக்கும் இங்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். இதேவேளை புதிய அதிபரும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
எம்.பி.அஹமட் ராஜி அவர்கள், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கல்வி கற்று 1988ம் ஆண்டு அப்பாடசாலையில் ஆசிரியர் சேவையில் இணைந்து சுமார் 36 ஆண்டுகள் இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்கு கணித பாட ஆசிரியராக பின்னர் உதவி அதிபராக, பிரதி அதிபராகவும் சேவையாற்றியுள்ளார். மாணவர்களி ன் கல்வி வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு செய்து வரும் ஒருவராவார். கல்விச் சமூகம் இவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கடமையை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வில், வலயக் கல்விப் பணிப்பாளர், முன்னாள் அதிபரின் சேவையை பாராட்டி நன்றி தெரிவித்து உரையாற்றியதுடன், எதிர்காலத்தில் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஒழுக்க விழுமியங்கள் போன்ற பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். இந்த சவாலை வெற்றி கொள்ளும் அதிபராக தற்போது பொறுப்பேற்கும் அதிபர் செயற்பட வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார். முன்னாள் அதிபர் எம்.எம். ஹிர்பகான் தன்னுடைய சேவை காலத்தில் தன்னோடு இணைந்து பயணித்த அனைவருக்கும் இங்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். இதேவேளை புதிய அதிபரும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
எம்.பி.அஹமட் ராஜி அவர்கள், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கல்வி கற்று 1988ம் ஆண்டு அப்பாடசாலையில் ஆசிரியர் சேவையில் இணைந்து சுமார் 36 ஆண்டுகள் இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்கு கணித பாட ஆசிரியராக பின்னர் உதவி அதிபராக, பிரதி அதிபராகவும் சேவையாற்றியுள்ளார். மாணவர்களி

0 comments:
Post a Comment