அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்டத்திற்கான கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்ட மத்திய செயற்குழு அமைப்பாளர் மற்றும் வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் , கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்களின் ஒருங்கிணைப்பில், கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளரான அனீஸ் அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களுக்குமான அமைப்பாளர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது, திருகோணமலை மாவட்டத்திற்கான அமைப்பாளராக கட்சியின் உயர்பீட உறுப்பினரான வைத்தியர் ஹில்மி முகைதீன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், அவருக்கான நியமனக் கடிதமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கட்சியின் திருகோணமலை மாவட்ட நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

















0 comments:
Post a Comment