• Latest News

    January 19, 2026

    ஈரான் விவகாரம்: பேச்சை மாற்றினார் அமெரிக்க அதிபர்!



    ஈரான் அதிகாரிகள், கொலைகளை நிறுத்துவதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்காது என்றும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

    ட்ரம்ப் உடைய இந்த திடீர் மாற்றத்தால் ஏமாற்றமடைந்த போராடும் ஈரானியர்கள், அவரது வார்த்தைகளை நம்பி வீதிக்கு வந்ததாலேயே இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த 5,000 பேரின் மரணத்திற்கு டிரம்ப்பே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர்."ட்ரம்ப் எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திவிட்டு, இப்போது நட்டாற்றில் விட்டுவிட்டார்" என்று தெஹ்ரான் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகத் தொடங்கிய போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது.

    இதில் பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்க ட்ரம்ப், "போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும்" என்று ஏற்றிவிட்டார்.

    தங்கள் நாட்டு விவகாரத்தில் ட்ரம்ப் தலையிட்டால் ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அரசு எச்சரித்தது.போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், தற்போது ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈரான் விவகாரம்: பேச்சை மாற்றினார் அமெரிக்க அதிபர்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top