- யூ.கே. காலித்தீன் -
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின்
களப்பணியாளர்களை
கௌரவிக்கும் நிகழ்வு ஸூரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.ரஃபி (ஹிழ்ரி)
அவர்களின் தலைமையிலும் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் பொதுச் செயலாளர்
யூ.கே. காலித்தீனின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற நிகழ்வானது சாய்ந்தமருது
லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் (27) மாலை 08மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் செயலாளர் எம்.எம்.
ஆஸிக் கலந்து கொண்டதோடு சாய்ந்தமருது ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவர்
அஷ்ஷேய்க் எம்.எம். சலீம் (ஸர்க்கி) அவர்களும் கௌரவ விருந்தினராக கலந்து
கொண்டார்.
பேரவையின் தலைவர் அப்துல் ஸலாம் அஸ்வரின் தலைமை உரையுடனும், வரவேற்புரையுடனும் ஆரம்பமான நிகழ்வானது
இறைவனின் திருப்பொருத்தத்தை மாத்திரம் நாடி இவ்வுலகில் எவ்வித கூழியையும்
எதிர்பாராமல் இப்பிராந்தியத்தில் உன்னதமான பணியினை செய்து வரும்
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை உருவான காலம் தொட்டு இன்று வரை
ஜனாஸா நல்லடக்கத்தின் போது கப்ர் வெட்டுதல், மரண வீடுகளுக்கான அத்தியாவசிய தேவையான கதிரைகள், கூடாரங்கள், மின் குமிழ்களை போன்ற இதர பொருட்களை
கொண்டு செல்லுதல் போன்ற
உன்னதமான
பணியினை மேற்கொண்ட பேரவையின் ஆரம்பகால தன்னார்வ களப்பணியாளர்களான
ஏ.எம்.ஹம்ஸா, ஐ.எல். சமீத் (இக்பால்) மற்றும் எம்.ஏ.எம். அனஸ் ஆகியோருக்கான
கௌரவிப்பும் சாண்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
பேரவையின்
அச்சானியாக இருந்து இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற சமூகத்தினரை திரும்பி
பார்க்க வைத்த உன்னத சேவையினை செய்து வந்த பேரவையின் தலைவர் அப்துல் ஸலாம்
அஸ்வர் தனது தனிப்பட்ட வேலை நிமிர்த்தம் பிரித்தானியாவுக்கு செல்ல
விருக்கின்ற அஸ்வர் அவர்களுக்கு ஸூரா சபையினராளும், ஜனாஷா பேரவையின்
களப்பணியாளர்கலாளும் நினைவுச் சின்னமும் பரிசுப் பொருட்களும் வழங்கி
கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.




0 comments:
Post a Comment