திருத்தணியில் கிராம மக்களின் 125 நாட்கள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அதிமுகவினர்.....
திருத்தணி - பிப்ரவரி -14
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றிய அதிமுக சார்பில்
கிராம
மக்களின் 125 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை
ஸ்டாலின் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று அதிமுகவினர் ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர்
திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்று திரண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
திருத்தணி மேற்கு ஒன்றிய செயலாளர் இ.என். கண்டிகை ஏ. ரவி மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிச்சந்திரன் ஆகியோரது முன்னிலையில்
இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியது இதில்
சிறப்பு
அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் அரக்கோணம் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர் கோ.அரி, முன்னாள் அமைச்சர், மாவட்டச்
செயலாளர் பி.வி. ரமணா, ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்
அப்போது பேசிய கழக அமைப்புச் செயலாளர் கோ.அரி
39
நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு தேவையான
திட்டங்களை எடுத்து வர திறமை இல்லாதவர்கள் இந்த திமுகவினர் மேலும் அப்போது
தோழமை கட்சியாக பிஜேபி இருந்தாலும் நாடாளுமன்றத்தில் அதிகளவு நாடாளுமன்ற
உறுப்பினர்கள் அதிமுக சார்பில் இருக்கும்போது நாடாளுமன்றத்தை முடக்கி
நாடாளுமன்றத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழகத்திற்கு எடுத்து
வந்தது அதிமுக அரசுதான் தற்போது இந்த தொகுதியின் அதிமுக நாடாளுமன்ற
உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தேர்தலுக்கு மட்டும் தான் வருவார் அவர்
தேர்தலுக்கு உங்கள் முன்னால் வந்தால் அவரிடம் இந்த தொகுதிக்கு எந்த நல்ல
விஷயமும் செய்யவில்லை எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் செய்யவில்லை என்று
நீங்கள் கேள்வி கேளுங்கள் 2026-ல் நல்ல திட்டங்களுடன் மக்களுக்கான ஆட்சியாக
அதிமுக அரசு அமைவதற்கு அனைவரும் மக்கள் நீங்கள் ஒத்துழைப்பு வழங்க
வேண்டும் என்று இந்த திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று உரை
நிகழ்த்தினார்
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரமணா பேசுகையில்
தமிழகத்தின்
நிதி இல்லை என்று தமிழக முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்
அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் அதிமுக தலைமை ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகு
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஒரு ஆளும் கட்சியினர் இப்படி ஆர்ப்பாட்டத்தை
அறிவித்துவிட்டு தெருவில் இறங்கி உள்ளனர் ஆளுங்கட்சியினர் எங்கேயாவது
ஆர்ப்பாட்டம் செய்வார்களா என்று கேள்வி எழுப்பினார் திமுகவினருக்கு ஆட்சி
நடத்த அருகதை இல்லை இந்த ஆட்சியை விட்டு போங்கடா என்று காட்டமாக ரமணா
பேசினார்
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில்
100
நாள் திட்டம் வழங்குவதற்கு நிதி இல்லை என்று 100 நாள் திட்டம் 125 நாள்
திட்டத்தை சீர்குலைக்க பார்க்கும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசுக்கு எதிராக மேற்கொண்டனர்
இந்த
நிகழ்வில் அதிமுகவின் தோழமைக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சியின்
மாவட்ட செயலாளர் தினேஷ், பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப்பிரிவு மாவட்டத்
துணைத் தலைவர் மில்கா முத்து, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்
வெங்கடேசன்,
ஒன்றிய
இளைஞரணி செயலாளர் பழனி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் நாராயணன், மாவட்ட
எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் கோதண்டன், நகர இளைஞரணி செயலாளர்கள் கேபிள்
சுரேஷ், மாவட்ட பிரதிநிதி சௌமியா ராஜசேகர், புரட்சி பாரதம் கட்சியின்
மேற்கும் ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் தாமோதரன், ஒன்றிய
துணைச் செயலாளர் ஹேமநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


0 comments:
Post a Comment