• Latest News

    February 10, 2026

    இலங்கையில் ஓரினச் சேர்க்கை தொடர்பில் முக்கிய தீர்ப்பு!

     இலங்கையில் ஓரினச் சேர்க்கை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

    இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர் LGBTQ சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு LGBTQ சமூகத்தை இலங்கையில் ஊக்குவிக்க ஒப்புதல் அளித்து இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் தலைவர் வெளியிட்ட கடிதத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர் இன்று (10.01.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். 

    இந்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக 2026 மார்ச் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் ஓரினச் சேர்க்கை தொடர்பில் முக்கிய தீர்ப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top