• Latest News

    February 07, 2026

    ஜாக்கிரதை: பெண்களுக்கு கண் அடிப்பது குற்றம்! நீதிமன்றம் தீர்ப்பு

    பெண்களைப் பார்த்து கண் அடிப்பதும், 'Flying Kiss' கொடுப்பதும் வெறும் கேலி மட்டுமல்ல, அது ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதிக்கும் "சொற்களற்ற பாலியல் துன்புறுத்தல்" என்று இந்தியாவின் சண்டிகர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

    2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி காலை 10:30 அளவில், ஒரு பெண் தனது வீட்டின் வெளியே கூட்டிச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது 62 வயதுடைய முதியவர் ஒருவர் அந்தப் பெண்ணைப் பார்த்து ஆபாசமான சைகைகளைச் செய்துள்ளார்.

    இதன்போது அவர் அந்தப் பெண்ணை நோக்கிக் கண் அடித்தும், 'Flying Kiss' கொடுத்தும் தொந்தரவு செய்ததாகவும் 500 ரூபாய் நாணயத்தாளை அந்தப் பெண்ணை நோக்கி வீசி, அவரை அசௌகரியத்துக்கு உட்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    ஆரம்பத்தில் அவமானம் காரணமாக அமைதியாக இருந்த அந்தப் பெண், பின்னர் முதியவரின் குடும்பத்தாரிடம் முறையிட்டபோது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

    அதற்கமைய, சண்டிகர் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து கடந்த ஜனவரி 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜாக்கிரதை: பெண்களுக்கு கண் அடிப்பது குற்றம்! நீதிமன்றம் தீர்ப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top