• Latest News

    July 25, 2013

    13வது திருத்தச்சட்டம்: முஸ்லிம் காங்கிரஸ் பல்டி !!

    13வது திருத்தச்சட்டத்தை ஆதரித்தும் அதை  பலவீனப்படுத்தும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை, கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கடைசி நேரத்தில் பின்வாங்கியுள்ளது.
    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்திருந்த தீர்மானம் கிழக்கு மாகாணசபையில் நேற்று விவாதிக்கப்படவிருந்த நிலையிலேயே, முஸ்லிம் காங்கிரஸ் அதனை மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.
    இதுகுறித்து கருத்து வெளியிட்ட குழுக்களின் தலைவர் ஏ.எம். ஜமீல், இந்த தீர்மானம் குறித்து விவாதம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை முன்னெடுப்பதில்லை என்று கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
    அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை திருத்தும் முடிவை பிற்போட்டுள்ளதால், பொருத்தமான நேரத்தில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 13வது திருத்தச்சட்டம்: முஸ்லிம் காங்கிரஸ் பல்டி !! Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top