• Latest News

    July 25, 2013

    பொதுபல சேனா ஒரு தீவிரவாத அமைப்பு - பேராசிரியர் ரொஹான் குணரத்ன


    பொதுபல சேனா அமைப்பானது அரசியல் இயக்கமொன்றோ அல்லது பெளத்த பயங்கரவாதம் தொடர்பான சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்தார்.
    இயக்கம்  ஒன்றோ அல்ல. அது ஒரு முற்று முழுதான    தீவிர போக்குடைய ஒரு அமைப்பாகும் என    அரசியல்    வன்முறைகள்      மற்றும் மதங்கள்   மூலமாக நல்லிணக்கம்  என்ற தொனிப்பொருளில் கொழும்பு -07, லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
    அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பேராசிரியர் ரொஹான் குணரத்ன மேலும் தெரிவித்ததாவது,  30 வருடகால யுத்தம் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையிலும் அரசானது சரியானதொரு பாடத்தை கற்க தவறியுள்ளது. இந்நிலையில் தலை தூக்கிவரும் மத அடிப்படையிலான தீவிர போக்குடையவர்களை கட்டுப்படுத்த அரசு தவறுமாயின் சமூக நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றதாக போகும்.
    குறிப்பாக பொது பல சேனா அமைப்பானது ஒரு பெளத்த இயக்கமோ அல்லது அரசியல் ரீதியான இயக்கமோ அல்ல. அது ஒரு முற்று முழுதான தீவிர போக்குடைய ஒரு அமைப்பாகும். இதனை நான் உறுதிப்பட தெரிவிக்கிறேன்.
    இதனால் இவ்வாறான அமைப்புக்களை கட்டுப்படுத்தும் வரை நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றது. என தெரிவித்தார்.
    இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வோதய அமைப்பின் தலைவர் கலாநிதி ஆரியரத்ன உரை நிகழ்த்துகையில், இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல் கலாசாரமானது தொடர்ந்தும் நீடிக்குமானால் இலங்கையின் சமூக நல்லிணக்கம்  சாத்தியமற்றுப் போகும். மக்கள் மனதில் நிம்மதியினை ஏற்படுத்துவதன் ஊடாகவே  சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்தார். இதனை விட இந்நிகழ்வில் நான்கு மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் தமது கருத்துக்களை முன்வித்தமை குறிப்பிடத்தக்கது.-
    விடிவெள்ளி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுபல சேனா ஒரு தீவிரவாத அமைப்பு - பேராசிரியர் ரொஹான் குணரத்ன Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top