பல வாரங்களுக்கு முன்னர் சார்ள்ஸ் பிலிப் ஆதர் ஜோர்ஜ் எனும் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸின் விசேட பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட குழுவொன்று இலங்கை வந்து சார்ள்ஸ_க்கு வழங்கவுள்ள பாதுகாப்பு, மாநாடு இடம்பெறும் இடம் மற்றுமு; அவருக்கு வழங்கப்படும் தங்குமிட வசதிகள் என்னவென்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க கலாநிதி லூசியன் ஆர்னோல்ட் இம்மானுவேல் டி சில்வாவிடமிருந்து இந்த வீட்டை விலைகொடுத்து வாங்கி அதனை பண்டாரநாயக்க வளவு என பெயரிட்டு தனது புதல்வரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிற்கு பரிசாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற் முன்னரும் நூற்றுக்கணக்கான பிரிட்டன் இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இலங்கைக் விஜயம் செய்த வேளையில் இந்த வீட்டில் தங்குமிட வசதிகளைப் பெற்றிருந்தனர்ஃ
உலகின் முதலாவது பெண் பிரதமரான சீறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க ஆகிய முக்கியமான பிரதிநிதிகள் இந்த வளவில் வாழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் இந்த வீட்டிலேயே கொலைசெய்யப்பட்டிருந்தார்.
0 comments:
Post a Comment