• Latest News

    August 30, 2013

    வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் நால்வர் பணி நீக்கம்

    வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தைச் சேர்ந்த நால்வர் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பிரிகேடியர் ஒருவரும் லெப்ரினன்ட் கேர்ணல் ஒருவருமே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

    ரத்துபஸ்வல பகுதியில் குடிநீரில் இரசாயன திரவியம் சேர்வதாகவும் அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி மக்கள் கடந்த முதலாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன்போது அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது மூவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் நால்வர் பணி நீக்கம் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top