• Latest News

    August 07, 2013

    அ.இ.ஜ.உ.ச வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என அறிவிப்பு ! கிண்ணியாவில் பிறை கண்டதாக தெரிவிப்பு!

    கிண்ணியாவில் ஜாவாப் பள்ளி  காக்கமுனை ஜாமில் அஸ்கர் ஆகிய மூன்று இடத்தில் நம்பகமான சுமார் 20 பேர் பிறை காண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆயினும் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்தில் இன்று புதன்கிழமை தென்பட்டவில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சற்றுமுன்னர் அறிவித்ததுள்ளது.

    இதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை வியாழக்கிழமை 30ஆவது நோன்பு நோற்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது. ஏற்கனவே திட்டமிட்ட படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருநாளை கொண்டாடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.

    ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயமுல் உலமா சபையின் பிரதிநிதிகள் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்இ முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள்இ பள்ளிவாசல்கள்இ தைக்காக்கள் மற்றும் சாவியக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அ.இ.ஜ.உ.ச வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என அறிவிப்பு ! கிண்ணியாவில் பிறை கண்டதாக தெரிவிப்பு! Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top