கொழும்பு -
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், அமைச்சருமான பசீர்
சேகுதாவுத்தை அந்தக் கட்சியிலிருந்து நீக்குவது மற்றும் அவரது அமைச்சுப் பொறுப்பை
திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தைக் கோருதல் ஆகிய விடயங்கள் தொடர்பில்
கட்சியின் உயர் அரசியல் பீட அங்கத்தவர்கள் கலந்தாலோசனை மேற்கொண்டு வருவதாக
நம்பத்தகுந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக் காலமாக சேகுதாவுத்தின் அரசசார்பு போக்கு மற்றும் வடமாகாண சபைத்
தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க
மறுத்தமை போன்ற பிரதான காரணங்களை முன்வைத்தே அவர் நீக்கப்படவுள்ளதாக
அறியமுடிகின்றது.
இதேவேளை, அமைச்சர் பஷீர் சேகுதாவுத்தை கட்சியிலிருந்து உடனடியாக
நீக்காவிட்டால் தாங்கள் கட்சியிலிருந்து வெளியேறப் போவதாக உயர்மட்ட
உறுப்பினர்கள் அமைச்சர் ஹக்கீமிடம் அறிவித்துள்ளதுடன், இது தொடர்பில்
காலக்கெடுவையும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment