நவம்பர் மாதத்திற்குள் இலங்கை சீனாவுடன்
நூறு வீதம் தீர்வையற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ளது. ஆசியாவில் எந்த
நாட்டுடனும் சீனா நூறு வீதம் தீர்வையற்ற சுதந்திர வர்த்தகத்தில் ஒப்பந்தம் செய்ய முன்வந்தது கிடையாது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே இத்தகவல்களை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது :-
அவர் மேலும் கூறியதாவது :-
இலங்கைக்கு உதவும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தில் உள்ளது. சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்களை இதில் உள்ளடக்குவது என ஆராயப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தினூடாக இலங்கை பொருட்களை சீனாவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்படும். இதற்கு முதல்ஏனைய ஆசிய நாடுகளுடன் சீனா 100 வீதம் முழுமையான வரியற்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது கிடையாது என்றார்
0 comments:
Post a Comment