• Latest News

    September 18, 2013

    சவூதியில்தான் இப்படியும் நடக்கிறது...!

    சவூதியில்தான் இப்படியும் நடக்கிறது...!
    (காத்தான்குடி முபா)
    உலகில் எல்லா இடங்களிலும் எல்லா நிலை மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அண்மைக் காலமாக வீட்டுப் பணிப்பெண்கள் சவூதி அரேபியாவில் படும் அவலம் பற்றி மிக மோசமாக சர்வதேச ஊடகங்கள் இரட்டிப்பு செய்த கருத்துக்களை வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று.
    சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு நடந்த நேரடியாக நான் அவதானித்த நிகழ்வு ஒன்றை இணையதள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    விடுமுறையில் இலங்கை செல்லும் பணிப்பெண் ஒருவரை சவூதி குடும்பம் ஒன்று வழியனுப்பி வைக்க விமான நிலையம் வந்திருந்தது, சிறுவர் முதியவர் பெண்கள் என அனைவரும் வந்திருந்தனர், பணிப்பெண் வெறும் கையுடன் நடந்து வருகிறார், அவரின் பொதிகளை அந்த குடும்பமே சுமந்து வருகிறது, தங்களின் ஒரு மகள் பிரிந்து செல்லும் போது ஏற்படும் கவலையின் அடையாளங்களை போலவே அனைவரது முகத்திலும் கவலையின் சுவடுகளை காண முடிந்தது. அப்பணிப்பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    அந்தப் பெண் விடைபெறும் போது அவருக்கு எல்லோருமே அன்பளிப்புகள் வழங்கினார்கள்.

    பெண்கள் அவரை முத்தமிட்டு வழியனுப்புகிறார்கள். குழந்தைகள் அப்பணிப்பெண்ணின் கைகளை பிடித்துக்கொண்டு அழுகிறார்கள். அப்பணிப்பெண் சுங்கப் பரிசோதனைகளை தாண்டி அவர்களை விட்டு மறையும்வரை அந்தக் குடும்பமே அத்திசையை உற்றுநோக்கிக் கொண்டு இருந்தார்கள். பார்க்கவே மிகவும் ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. சவூதி அரேபியாவில் இப்படியும் வீட்டு எஜமானர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 
    அல்ஹம்துலில்லாஹ்...!
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சவூதியில்தான் இப்படியும் நடக்கிறது...! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top