• Latest News

    September 18, 2013

    வகுப்பறையில் குழந்தை பெற்ற ஆசிரியை!

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆசிரியை, பிரிட்டனில், வகுப்பறையிலேயே குழந்தை பெற்றார்.
    லண்டனில், ராம்போர்ட் பகுதியில் உள்ள பள்ளியில், ஆசிரியராக பணிபுரிபவர் டயானி கிரிஷ், 30. இவரது கணவர் விஜய் வீரமணி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த, டயானி, கடந்த வாரம், பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, விடுப்பு எடுத்துக் கொண்டு, வீடு திரும்ப முயன்றார். பள்ளிக்கு வந்து தன்னை அழைத்து செல்லும்படி கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
    பிரசவ வலி ஏற்பட்ட விஷயத்தை, சக ஆசிரியைகளிடமும் தெரிவித்தார். அவர்கள், ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்தனர். அதற்குள்ளாக அவருக்கு வகுப்பறையிலேயே, பிரசவம் நடந்தது. பள்ளி ஊழியர்களும், ஆசிரியைகளும் அவருக்கு சுக பிரசவம் நடக்க உதவினர். கணவர் வந்து, டயானியை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். டயானிக்கு இது இரண்டாவது குழந்தை. இந்த ஆண் குழந்தைக்கு, "ஜோனா' என்று பெயர் சூட்டியுள்ளனர். வகுப்பறையில், ஜோனா பிறந்ததால், அந்த பள்ளியின் வகுப்பறைக்கும், "ஜோனா' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.



    Click Here
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வகுப்பறையில் குழந்தை பெற்ற ஆசிரியை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top