கடற்படையின் கடல் முறைமை கட்டுப்பாட்டு தலைமையகத்தில் தாக்குதல் நடத்திய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகிறார்கள்.
மூன்று பேர் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இருவர் இன்னமும்
ஒழிந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்களில் எவரும் படையைச்
சேர்ந்தவர்கள் அல்ல.
இரு பொலிஸ்காரர்கள் உட்பட 10 பேர்வரை அங்கு சுடப்பட்டதாக பொலிஸர்
கூறுகிறார்கள். ஆட்கள் இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறும்
பொலிஸார் மேலதிக விபரங்களை தரவில்லை. நான்கு பேர் இத்தாக்குதலில்
கொல்லப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் ஒருவர் செய்துள்ளார்.
மூவாயிரம் பேருக்கும் அதிகமானோர் பணியாற்றும் அந்தக் கட்டிடத்தில், உள்ளேயே
மறைந்திருக்குமாறு பணியாளர்கள் கேட்கப்பட்டிருக்கிறார்கள். தாக்குதல்
நடந்த இடத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நகரின்
பாதுகாப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
காயமடைந்த ஒருவர் சற்று முன் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று முன்னேற்பாடுகள்
செய்யப்பட்டுவரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் மெடிடரேனியன்
கடலில் சிரியாவுக்கு அருகே உள்ளன. அந்தக் கப்பல்களுக்கான உத்தரவுகள் இந்த
பில்டிங்கின் ஆபரேஷன் சென்டரில் இருந்துதான் கொடுக்கப்படுகின்றன.
அப்படியான நிலையில், அமெரிக்க தலைநகரில், கடற்படை தலைமையகத்திலேயே
துப்பாக்கியுடன் ஒரு நபர் நுழைந்து தாக்குதல் நடத்தியது, மிகவும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment