வடமாகாணத்தில் 4 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மறைந்து வாழ்ந்து
வருவதாக யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க
தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
4 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எந்தவொரு புனர்வாழ்வு பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ளாது தொடர்ந்து தலைமறைவாகியுள்ளனர்.
இவர்கள் வடமாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் தேர்தல்
பிரச்சாரங்களில் பங்குபற்றி வருவதாகவும் இதனால் மீண்டும் ஒன்றிதிரண்டு ஆயுத
போராட்டங்களில் ஈடுபடுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் அவர்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான காரணங்களை கருத்திற் கொண்டு
யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவ முகாம்களை அமைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ் மாவட்ட
கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment