மத்திய மாகாண சபைக்கு ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்டி
பொதுச்சந்தை முன்றலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு
தலைமையேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு
தெரிவித்தார்.
பிரதமர் தி.மு. ஜயரட்ன- அமைச்சர்கள்- பாராளுமன்ற உறுப்பினர்கள்- ஐ.ம.சு.மு. வேட்பாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்த இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக மத்திய- வடமேல் மற்றும் வடக்கு மாகாண மக்கள் வெள்ளம்போல திரண்டு வருகின்றனர்.
தேர்தல் நடக்கும் பிரதேசங்களுக்குச் சென்றால் மக்கள் ஐ.ம.சு.மு வைச் சுற்றியே திரள்கின்றனர். பல்வேறு பொய்ப் பிரசாரங்களைப் பரப்பி சிலர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி நாட்டைக் குழப்ப முயல்கின்றனர். சில தலைவர்கள் நாட்டில் ஏதாவது அசம்பாவிதங்களை ஏற்படுத்தி நாட்டில் பிளவை ஏற்படுத்த தயாராகின்றனர்.
இது தொடர்பாக நான் பாதுகாப்புத் தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். மக்கள் இவைகுறித்து குழப்பமடையத் தேவையில்லை.
எமது அரசாங்கம் எந்த அபிவிருத்தியும் செய்யவில்லை என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். நான் எனது சிறுவயதில்தான் காப்பட் வீதியைக் கண்டிருக்கிறேன். அதுவும் கொழும்பில் மாத்திரம்தான் காப்பட் வீதியைக் காணக்கிடைத்தது.
ஆனால்- இன்று அபிவிருத்தியை எங்கு சென்றாலும் காணமுடிகிறது. எமது அரசாங்கமே கிராமங்கள் வரை கொண்டுசென்றது. கண்டி - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை குறித்து சிலர் தவறான பிரசாரங்களை பரப்பி வருகின்றனர். ஆனால் எமது அரசாங்கம் மக்களின் கருத்துக்களையும் தேவைகளையும் அறிந்தே செயற்படுகிறது.
பிரதேசத்தின் அபிவிருத்திக்கு வீதிகள் மிகவும் பிரதானமானது. அதனால் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் 50 கிலோமீற்றர் தூர வீதிகளை மீளமைத்து வருகின்றோம்.
அடுத்த வருடம் முதல் ஒவ்வொரு தொகுதிக்கும் 100 கிலோமீற்றர் தூர வீதிகள் புனரமைத்துக் கொடுக்கப்படும். நாட்டின் எதிர்காலம் குறித்து கருதியே பிரதேசத்தில் விமானநிலையமொன்றை அமைக்கத் தயாராகி வருகிறோம்.
தலதாமாளிகைக்குச் செல்லும் வீதியை மூடியது குறித்து சிலர் அதிருப்தி வெளியிட்டனர். ஆனால் நானும் தலதாமாளிகைக்கு நடந்தே செல்கிறேன். மக்காவுக்குக்கூட மூன்று- நான்கு கிலோமீற்றர்கள் நடந்துதான் செல்லவேண்டும்.
மலையைக் குடைந்தாவது மறுபக்கம் செல்வதற்கு வழியமைப்பேன். எனக்கு முடியாதது எதுவும் இல்லை. இன்று குறித்து மட்டும் சிந்திக்காமல் எதிர்காலம் குறித்தும் சிந்தித்து செயற்பட வேண்டும். அதனாலேயே 30 வருடங்களின் பின் நாட்டை மீட்டெடுத்தோம். உயிர்த்தியாகம் செய்து இந்த நாட்டை பாதுகாத்தோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அளிக்கும் வாக்குறுதிகளை அவ்வாறே நிறைவேற்றும். இந்த நாட்டைத் துண்டாட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளோம். அந்த வாக்குறுதியை கடைசி வரை காப்பாற்றுவோம்.
பிரபாகரனால் சாதிக்க முடியாததை வேறு எவருக்கும் செய்வதற்கு இடமளியோம். 21ஆம் திகதி உங்களது பொறுப்பை சரிவர நிறைவேற்றுங்கள். உங்கள் தெளிவான முடிவை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்கூறுங்கள். இதுதான் மலையக மக்களின் முடிவு என்பதை உறுதிபட கூறுங்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கைகோர்த்து 21ஆம் திகதி வெற்றிலைச் சின்னத்தை வெற்றிபெற வைப்போம்.
உங்கள் மூன்று விருப்பு வாக்குகளையும் தவறாமல் பயன்படுத்துங்கள் என்று தெரிவித்தார்.
பிரதமர் தி.மு.ஜயரட்ன- அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா- ஏ.எச்.எம்.பெளசி- டிலான் பெரேரா- விமல் வீரவன்ச- மஹிந்தானந்த அளுத்கமகே- பவித்திரா வன்னியாராச்சி- ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரும் இங்கு உரையாற்றினர். (
0 comments:
Post a Comment