• Latest News

    September 13, 2013

    கொழும்பில் 31 பாடசாலைகளுக்கு விடுமுறை!

    37 வருடங்களுக்குப் பின்னர்  இலங்கையில் நடைபெறும் உலக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாடான பொது நலவாய நாடுகளின் மாநாட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 31 பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி முதல் 19ம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது

    குறித்த விடுமுறைக்காலத்தில் இழக்கப்படும்  பாடசாலை நாட்களை ஈடுசெய்யும் வகையிலான நடவடிக்கை தொடர்பாக பாடசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடி ஒரு தீர்வு பெறப்படவுள்ளது
    விடுமுறை வழங்கப்படவுள்ள பாடசாலை பெயர்கள் வருமாறு:
    கொள்ளுப்பிட்டி மஹாநாம கல்லூரி- மருதானை ஆனந்தா கல்லூரி- மாளிகாவத்தை பாரொன் ஜயதிலக கல்லூரி- மாளிகாவத்தை இராஜசிங்க கல்லூரி- மருதானை அசோக கல்லூரி- மருதானை விஹாரமாதேவி மகளிர் கல்லூரி- மருதானை சங்கராஜ கல்லூரி- கொம்பனித் தெரு ஹோலி ரோசரி சிங்கள கல்லூரி- கொம்பனித் தெரு ஹோலி ரோசரி தமிழ் கல்லூரி- கொம்பனித் தெரு ரி.பி.ஜாயா கல்லூரி- கொம்பனித் தெரு அல் இக்பால் கல்லூரி- வாழைத்தோட்டம் மிஹிந்து கல்லூரி- வாழைத்தோட்டம் அல்ஹிக்மா கல்லூரி- கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயம்- பம்பலப்பிட்டி சென்.போல் மகளிர் கல்லூரி- பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி- கொழும்பு விசாகா கல்லூரி- இசிப்பத்தனை கல்லூரி- பொரள்ளை சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னக்கர கல்லூரி- பொரள்ளை சுசமய வர்த்தன கல்லூரி- கொழும்பு ரோயல் கல்லூரி- டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி- தேஸ்டன் கல்லூரி- ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரி- மருதானை ஆனந்தா மகளிர் கல்லூரி- மருதானை கோத்தமி மகளிர் கல்லூரி- பொரள்ளை நாலந்தா மகா வித்தியாலயம்- கொம்பனித்தெரு மகாபோதி வித்தியாலயம்- கொம்பனித்தெரு சாரிபுத்த வித்தியாலயம்- மருதானை அல்ஹிதாயா மகா வித்தியாலயம்- கொழும்பு 12 ஈ.ஏ.குணசிங்க வித்தியாலயம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பில் 31 பாடசாலைகளுக்கு விடுமுறை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top