சில அரபு நாடுகளின் விமான நிலையங்களில்
இலங்கையை தாக்கும் தகவல்களை கொண்ட ஒரு சஞ்சிகை விநியோகிக்கப் பட்டு
வருவதாகவும் அது தொடர்பாக வெளிவிவகார அமைச்சை விசாரணை நடாத்துமாறும்
ஜனாதிபதி மஹிந்த அறிவுறுத்தியுள்ளாறாம் .
தமிழ் ஊடக பிரதானிகளை இன்று சந்தித்த
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த சஞ்சிகை பெளத்த குழுக்கள் இலங்கை
முஸ்லிம் பெண்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக குறிப்பிடுகிறது என்று
தெரிவித்துள்ளார் ,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும்
இலங்கையின் தமிழ் ஊடகங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று காலை (12)
விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு
இடம்பெற்றுள்ளது. இதில் பிரதி வெளிவிவகார பிரதி அமைச்சர் நியூமால் பெரேரா,
ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி தமிழ் ஊடகப் பிரிவு இணைப்பாளர்
சிவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ள்ளனர்.
0 comments:
Post a Comment