ரஜரட்ட ரயில் இன்று காலை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த போது, பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ ரத்நாயக்க கூறினார்.
ரயில் நிலையத்தின் ரயில்வே உப உத்தியோகத்தர் பணிக்கு சமூகமளிக்காமையே இதற்கு காரணமாகும்.
இதற்கமைய புதிய நகரம் ரயில் நிலையத்தில் ஏறிய பயணிகள் ஷ்ராவஸ்திபுர ரயில் நிலையத்திலேயே தமக்கான ரயில் பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டனர்.
இதனால் ரயில் போக்குவரத்தில் 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பிரதேச ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment