இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்தார்.
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சை கடந்த மாதம் 25 ஆம் திகதி நடைபெற்றது.
இந்தப் பரீட்சையில் மூன்று இலட்சத்து 29 ஆயிரத்து 725 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாயிரத்து 836 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள் நடைபெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment