இலங்கையில் பாரதீய ஜனதா கட்சியின் கிளையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தியாவில் நடைபெற்ற பொதுஜன மாநாடு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் அயல் நாடான இலங்கையில் பாரதீய ஜனதா கட்சியை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக கூறியுள்ளார்.எதிர்காலத்தில் நேபாளத்திலும் கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் இலங்கையில் கட்சியை ஆரம்பித்த பின்னர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியை சர்வதேச கட்சியாக மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment